Krishnarajah, S Prof ( - 29.05.2009)

பேராசிரியர் முனைவர் சோ.கிருஷ்ணராஜா யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியற்துறையில் முதுநிலை ஆசிரியராக, ஆய்வாளராகப் பணியாற்றி கலைப்பீடாதிபதியாக உயர்வு பெற்றவர். 

மெய்யியற்கலை, இலக்கியம், உளவியல் மற்றும் புதிய சிந்தனை வரலாறு போன்றவற்றில் ஆழமான அகலமான கற்றலும் தேடலும் உள்ளவர். அவை சார்ந்த கருத்தாடல்களிலும் ஆய்வுகளிலும் முழுமையாக ஈடுபட்டுவருபவர். இதுவரையில் இவர் எழுதிய நூல்கள் இத்துறைகள்சார் அறிவுருவாக்கப் பணியில் தனியிடம் பெறுபவை. 

இவரது சைவசித்தாந்தம் குறித்த வாசிப்பும் ஆய்வும் தமிழில் நுணுக்கமான வித்தியாசமான மற்றுப் பார்வைகளை முன்வப்பவை. புதிய பொருள்கோடல் மரபை உருவாக்குபவை. இவர் தொடர்ந்து சமூகவரலாற்றுப் பின்னணியில் அழகியல், தத்துவ உரையாடல்கள் பற்றிய தேடல்களால் புதிய ஆய்வுக் களங்கள் நோக்கிய பிரச்சினைப்பாடுகளை உருவாக்குகின்றார்,  

சோ.கிருஷ்ணராஜா புத்தகங்கள்
2008 - அழகியல் - அழகியல்
2017 - அழகியல் - அழகியல்