Sandrasekaram, Paththakuutti (17.07.1926 - 12.11.1987)

 à®•à®²à¯à®µà®¿à®¯à®¿à®¯à®²à¯ துறையில் ஆய்வாளராகவும், பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணிபுரிந்தவர். கல்வியியலை தமிழ்மொழி மூலம் கற்பித்த முன்னோடி. தமிழ்மொழி மூலம் உயர்நிலையான ஆய்வுகளை மேற்கொள்ள முடியுமென்பதை நிரூபணமாக்கியவர். தாய்மொழிக் கல்வி வாயிலாகவே புதிய கண்டுபிடிப்புக்களையும் அறிவுருவாக்கச் à®šà¯†à®¯à®±à¯à®ªà®¾à®Ÿà¯à®•à®³à¯ˆà®¯à¯à®®à¯ மேற்கொண்டவர். கல்வித் தத்துவம் தொடர்பான விரிநிலை சிந்தனையும் ஆழமான தரிசனமும் கொண்டவர். இதனால் சில நூல்களையும், கட்டுரைகளையும் ஆக்கியவர். கல்வித் தத்துவத்தை உயர்நிலையில் எடுத்துரைப்பதற்குரிய வலுவான மொழிக்கட்டமைப்பைத் தமிழில் உருவாக்கியவர். கல்வியியல் சார்ந்த பல எண்ணக்கருக்களையும்  à®¤à®®à®¿à®´à®¿à®²à¯ உருவாக்கியவர். மேலைத்தேய, கீழைத்தேய தத்துவ சிந்தனை மரபுகளுடன் ஊடாடி நமக்கான à®…றிகைமரபை கல்விமரபை மீள்கண்டுபிடிப்பதிலும் முனைப்புடன் செயற்பட்டவர்.

சந்திரசேகரம், பத்தக்குட்டி புத்தகங்கள்
2012 - கல்வியியல் - கல்வியியற் சிந்தனைகள்
2011 - கல்வியியல் - கல்வித் தத்துவம்