Selvarathinam Chanthirasekaram

கலாநிதி செ.சந்திரசேகரம் யாழ்பாண பல்கலைகழகத்தில் 1996இல' பொருளியல் சிறப்பு பட்டதாரியாக வெளியேறி 1999இல் கொழும்பு பல்கலைகழகத்தில் உதவி விரிவுரையாளராக இணைந்து அங்கு முதுமானிப் பட்டம் பெற்றவர். 2002இல் யாழ்பாண பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக இணைந்து 2004 இல் மக்கள் சீனக் குடியரசிக்குப் புலமைப்பரிசில் பெற்று சென்று, அங்கு புகழ் பெற்ற குவாசோங் விஞ்ஞான தொழிநுட்ப பல்கலைகழகத்தில்  (HUST) 'இலங்கையில் பொருளாதார வளர்ச்சிக்கும் பணவீக்கத்திற்குமான சமூக அரசியல் காரணிகள்' என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து 2008இல் கலாநிதிப்பட்டம் பெற்றவர்.
இவரது இந்த ஆய்வுக்கட்டுரை ஜேர்மனியில் உள்ளப் புகழ்பெற்ற LAMBERT கல்வி வெளியீட்டு சமூகத்தினால் நூல்வடிவம் பெற்றுள்ளது. இவருடைய அரசியல் பொருளியல்துறை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் பல உலகின் புகழ்பெற்ற ஆய்வுச் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. 
அத்துடன் பல்வேறு ஐரோப்பிய ஆசிய நாடுகளின் சர்வதேச ஆய்வரங்குகளிலும் மற்றும் இலங்கையில் தேசிய பிராந்திய ஆய்வரங்குகளிலும் கலந்துக் கொண்டு பல ஆய்வுக்கட்டுரைகளையும் சமர்பித்துள்ளார். இதுவரை 'பொருளாதார அபிவிருத்தி: சீனா இந்தியா ஓர் ஒப்பீட்டு ஆய்வு' உள்ளிட்ட ஆறுக்கும் மேலான நூல்களையும் ஆங்கிலத்திலும் தமிலிலும் புலமைத்துவப் பார்வையில் வெளியிட்டுள்ளார். 
இவ்வாரான வெளியீடுகள் மூலம் வளர்ந்துவரும் துடிப்புள்ள ஆய்வாளர் என்ற முத்திரையைப் பெற்றுள்ளார். 

 

செல்வரத்தினம் சந்திரசேகரம் புத்தகங்கள்
2013 - பொருளியல் - பொருளாதார அபிவிருத்தி : சிங்கப்பூர் இலங்கை