Suseendirarajah, S Prof

சுவாமிநாதன் சுசீந்திரராஜா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மொழியியில் மற்றும் ஆங்கித்துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் இருந்து பணி ஓய்வு பெற்றவர். இவர் 1960 இல் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் மாணவராக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பயின்று முனைவர் பட்டம் பெற்றவர். 

இவர் மொழியியல் கற்கையில் ஆழமும் விரிவும் மிக்க புலமையாளர். இத்துறைசார் கல்விப் புலத்தின் மூத்த பேராசிரியர், ஆய்வாளர். தொடர்ந்து பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றியவர். இவர் மரபுவழி இலக்கணக்கூறுகளோடு நவீன மொழியியல் கருத்துக்கையும் இணைத்து தற்கால தமிழ்மொழியின் இலக்கண அமைப்பை ஆராயும் பண்பு கொண்டவர். மொழியல் புலமைவழி நின்று தமிழியலை நோக்கும் புது மரபுக்கு தடம் அமைத்திருப்பவர். தமிழ் இலக்கணம் கற்கும் மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் தெளிவான மொழிசார் சிந்தனைகளை உருவாக்கி ஆய்வுநோக்கில் புரிந்துகொள்வதற்கான புலமையை வெளிப்படுத்துபவர்.  

சு.சுசீந்திரராஜா புத்தகங்கள்
2011 - கல்வியியல் - தமிழியல்சார் சிந்தனைத் துளிகள் ( தொகுதி II )
2009 - கல்வியியல் - தமிழியல்சார் சிந்தனைத் துளிகள்