Thedchanamoorthy, S.T

புலவர் செ.து தெட்சணாமூர்த்தி யாழ் கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் 1955ஆம் ஆண்டு தொடக்கம் நாடகத் துறையில் முழுமையாக ஈடுபாடு கொண்டு உழைத்தவர். இதுவரை எண்பது நாடகங்களை எழுதி மேடையேற்றியவர்.  ‘பூதத்தம்பி” எனும் வரலாற்றுக் காவியத்தை எழுதி திரைப்படமாகவும் தயாரித்தவர். பாடசாலைகளில் மேடையேறிய பல நாட்டிய நாடகங்களையும் எழுதியவர்.

இவர் தலைசிறந்த வரலாற்று நாடகாசிரியர் என்று பலராலும் பாராட்டுப் பெற்றவர். ’சிந்தனைச் சிற்பி“ ‘நாடகப்பேராசிரியர்” முதலானப் பட்டங்களுக்கும் உரித்தானவர். நாடகத் துறையுடன் மட்டுமல்லாது கவிதைத் துறையிலும் அதிகம் ஈடுபாடு கொண்டவர். பலகவியரங்குகளில் பங்குகொண்டும் தலைமை வகித்தும் வந்தவர் 
 
இவரது ‘பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்” (1962) எனும் நெடுங்காவியம் ஈழநாடு வாரமலரில் வெளிவந்து பலரது பாராட்டையும் பெற்றது.  à®¤à¯Šà®Ÿà®°à¯à®¨à¯à®¤à¯ ’குடியிருந்த கோவில்” (1963) ‘குழந்தைக் குமரன்”(1965)  ’கமலக்கண்ணன் பிள்ளைத் தமிழ்”  (1971)  ‘நல்லைச் சிலேடை வெண்பா” (1973) போன்ற நூல்களையும் வெளியிட்டவர். இவர் சிறுவர் இலக்கியம் சார்ந்து எண்ணற்ற படைப்புக்களை எழுதியவர்.
செ.து.தெட்சணாமூர்த்தி புத்தகங்கள்
2010 - குழந்தை இலக்கியம் - பால் நிலா
2010 - குழந்தை இலக்கியம் - குயிலோசை
2010 - குழந்தை இலக்கியம் - உறவுகள்
- குழந்தை இலக்கியம் - பால் நிலா
- குழந்தை இலக்கியம் - குயிலோசை
- குழந்தை இலக்கியம் - உறவுகள்