Thuraisamy Sivabalan

துரைசாமி சிவபாலன் ( காந்தி ) யாழ்  / புங்குடுதீவைப் பிறப்பிடமாகக்கொண்ட நூலாசிரியர் துரைச்சாமி சிவபாலன் வேலணை மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்கல்வி கற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ், புவியியல், பொருளியல் ஆகிய பாடங்களைக் கற்றுக் கலைப்பட்டதாரி பட்டம் பெற்றவர். ஆசிரியரான இவர் மன்னார் நானாட்டானிலும் சிலகாலம் வாழ்ந்தவர். இவர் புலம் பெயர்ந்து இத்தாலி-பலெர்மோ நகரத்தில் 1990 இல் வாழ்ந்தபோது "மழலை" எனும் கல் இலக்கிய மாநாந்த ச்ஞ்சிகையினை தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக ஆசிரியராக இருந்து வெளியிட்டவர். அங்கு ஒரு தமிழ்ப்பாடசாலை உருவாகக் காரணமாக இருந்தவர். 

 
படந்த 12 ஆண்டுகளாக இங்கிலாந்தில் மூன்று பிள்ளைகளுடன் குடும்பமாக வாழ்ந்துவரும் இவர் வித்துவான் வேலன் இலக்கியவட்ட உறுப்பினர். தமிழ் கற்றல், கற்பித்தலில் பெருவிருப்புடைய இவரைப் பட்டிமன்ற, கவியரங்கு மேடைகளில் காணலாம். இவரின் தமிழ்மொழி ஆர்வத்தின் வெளிப்பாடக வெளிவரும் முதல் நூல் அ ஆ இ.
துரைச்சாமி சிவபாலன் புத்தகங்கள்
2012 - தமிழ்மொழிக்கல்வி நூல் - அ ஆ இ... உயிர்மொழி