Book Type (புத்தக வகை) : வரலாறு
Title (தலைப்பு) : தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2008-11-02-026
ISBN : 978-955-1857-25-7
EPABNo : EPAB/02/18597
Author Name (எழுதியவர் பெயர்) : கே.ரீ.கணேசலிங்கம்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 192
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 580.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம் 

  • முன்னுரை
  • ஆசிரியர் உரை
  • பதிப்புரை
  • அரசியல் கலாச்சாரம் :  à®“ர் எண்ணக்கரு அறிமுகம் எண்ணக்கருவின் தோற்றம்
  • தென்னாசிய  à®…ரசியல் கலாசாரத்தின் மூலங்களை இனம் காணுதல்
  • தென்னாசிய நாடுகளின் அரசியலில் காலனித்துவமும் தேசியவாதமும்
  • தென்னாசிய நாடுகளின்  à®…ரசியல் முறைமைகள்
  • தென்னாசியாவில் இராணுவ அரசியல்
Full Description (முழுவிபரம்):

'தென்னாசியாவின் அரசியல் கலாசாரம்' என்ற நூல் நீண்டவாசிப்பும், உரையாடலின் பின்பாக வெளிவரும் பிரசவ-மாகும். ஏறக்குறைய 2001 முதல் 2005 வரையான காலப்பகுதியில் இந்நூலுக்கான தயார்ப்படுத்தலும் முதுமெய்யியல் மானிக்கான ஆய்வும் ஒரே சமகாலத்தில் நிகழ்ந்ததெனக் கூறலாம். முதுமெய்யியல் மானிக்கான ஆய்வில் தேடியவற்றை அப்படியே ஒப்புவிக்க முடி-யாத மட்டுப்பாட்டினால் எழுந்ததே இந்நூலாகும். மேலும் அக்கா-லப்பகுதியில் யாழ்.பல்கலைக்கழகத்தின் சமூகவியல்துறை மாண-வர்களுக்கான தென்னாசிய அரசியல் பற்றிய கற்பித்தலை மேற்-கொள்ளும் சந்தர்ப்பம் பேராசிரியர் என். சண்முகலிங்கத்தினால் (தற்போதைய துணைவேந்தர்) எனக்கு வழங்கப்பட்டது. அதனை தெளிவாகப் புரிந்துகொண்ட நான் அவ்விரிவுரை வகுப்புக்களில் என்னிடம் கேள்விகளையும், அதற்கான தயார்ப்படுத்தலின் இயைபுத் தன்மையையும் ஒழுங்குபடுத்த உதவிய சமூகவியல் துறை மாண-வர்களின் பின்னூட்டல் இந்நூலின் உருவாக்கத்திற்கான இன்னோர் காரணமாகும். இதனைவிட தென்னாசியாவின் அரசியல் கொதி-நிலை தொடர்பாக என்னிடம் இயல்பாகக் காணப்படும் கருத்தியல் மாதிரியும் இதன் படைப்புக்கு வலிமை சேர்த்த காரணியாகக் கொள்ளலாம். இந்நூலினை 2005ஆம் ஆண்டுகளில் வெளியி-டுவதென தீர்மானித்த போதே என்னைத் திட்டமிட்டு பழிவாங்க முயன்ற நடவடிக்கை நிகழ்ந்தது. அதனால் இவ்வெளியீட்டை காலம் தாழ்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நூல் கோட்பாட்டு மாதிரிக்குள் நிகழும் நடைமுறை பலத்தையும், பலவீனத்தையும் சம அளவில் பரிசீலிக்க தளைப்-பட்டுள்ளது. தென்னாசிய அரசியலை முதன்மைப்படுத்தும் போது அதன் அடிப்படை அரசியல் சமூகத்துக்கும் இடையில் நிகழும் போட்டித் தன்மையின் வெற்றி தோல்வி எவ்வகை பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியதென்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அரசியலை வெறும் நிறுவன வழியாகவும், கோட்பாட்டு வழியாகவும் புலமைப்-படுத்துவதை விடுத்து அதன் உயிர்மையத்தையும், தோற்றத்தையும் அகழ்வதன் மூலம் அதன் உண்மை அர்த்தத்தை கண்டுகொள்ள முடியுமென்பதை இந்நூல் அதிகம் கொண்டிருக்கிறது.
இன, மத, மொழி, சாதி, குலமரபுகளுக்குள்ளால் கட்டப்-பட்டுள்ள தென்னாசிய அரசியலில் பங்கு எப்படி ஆதிக்க சக்திகளின் வடிவமாக எழுச்சிபெற்றது. அவ்வகை எழுச்சிக்குள் நிகழ்ந்த நவீனத்துவ சிந்தனை மீதான மூழ்கடிப்பின் விளைவு மீளமுடியாத முரண்பாட்டை தோற்றுவித்ததென்பதை தெளிவுற இந்நூல் அளவீடு செய்கிறது.
தென்னாசியாவின் இயல்பான அரசியல் கலாசாரத்திற்குள் மேற்குலக அரசியல் கலாசாரத்தின் ஊடுருவல் நிகழ்ந்த வடிவத்-தையும் அதற்கூடாக எழுந்த விளைவுகளை புரிதல் அவசியமானது. அவ்வகை புரிதலே தென்னாசிய அரசியலின் சரியான வழி-முறையை அடையாளம் காண உதவும் குடியேற்ற வாதத்தின் பிற்சேர்க்கை ஒவ்வொன்றும் நிலைத்திருக்க முடியாத அரசியல் உண்மையை தென்னாசியா முழுவதும் ஏற்படுத்தியது. மேலும் நவீனத்துவம், பின்நவீனத்துவம் போன்ற உரையாடல்கள் குழப்பகரமான அரசியல் - சமூக வடிவத்தை உருவாக்கியுள்ளது. இது நிலையற்ற போக்குக்கும் தீர்வற்ற முரணியத்திற்கும் வழிவகுத்ததுடன் அதன் தொடர்ச்சியை இயைபாக்கமிக்கதாக ஆக்க முயலுகின்றது. அவ்வகையில் இந்நூலின் உள்ளடக்கம் அவற்றின் பலவீனங்களை அடையாளப்படுத்துவதன் ஊடாகப் பலப்படுத்த வேண்டிய சுயத்தின் எல்லைகளை முதன்மைப்படுத்துகின்றது. 
இறுதியாக இந்நூலை ஆக்கும்போது எனக்கு உதவிய நிறை நட்புகளுக்கு நன்றி கூறுதல் மேன்மையான பணியாகும். முதலில் எனது மாணவர்களுக்கு நன்றி கூறுதல் வேண்டும். என்னை எப்போது குடைந்து குடைந்து கேள்வி கேட்கும் அரசறிவியல், சமூகவியல், மற்றும் புவியியல் மாணவர்களின் தூண்டுதலுக்கு நன்றிகள், மேலும் இந்த சந்தர்ப்பத்தை எனக்கு தந்த துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கனுக்கு நன்றிகள் மேலும் எனது துறைத்தலைவரும் பேராசிரியருமான ஏ.வி. மணிவாசகர் அவர்களுக்கு நன்றி கூறுவது முதன்மையான கடமையாகும். அவ்வப்போது அமைப்பினை, விடயத்தினை சரிசெய்து ஒழுங்கு-படுத்துவது சில சொற்களை இணைப்பது என பெரும் வழிகாட்டு-தலை எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பார். அவரது ஆலோச-னைக்குள் எனது கருத்துக்கள் செழுமைபெற்றுள்ளது என்றே கூறலாம். இவற்றுடன் இந்நூலை வெளிக்கொண்டுவர அதிக சிரத்தை எடுத்த மதுசூதனனுக்கும், சேமமடுப்பதிப்பகத்துக்கும் நன்றிகள். மேலும் என்னோடு எனது வாழ்வோடு தன்னையும் தனது உயர்ந்த எண்ணத்தையும் எனக்காக தியாகம் செய்யும் எனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுக்கும் நன்றிகள். 
ஆசிரியர்
கே. ரீ. கணேசலிங்கம்