Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : கல்வியியலும் கணிப்பீட்டியலும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2008-08-04-24
ISBN : 978-955-1857-23-3
EPABNo : EPAB/02/18834
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2016
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 100
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): 2ம் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

(01)    à®•à®£à®¿à®ªà¯à®ªà¯€à®Ÿà¯à®Ÿà®¿à®¯à®²à®¿à®©à¯ வரலாறு    01
(02)    à®•à®£à®¿à®ªà¯à®ªà¯€à®Ÿà¯à®Ÿà®¿à®¯à®²à¯    11
(03)    à®•à®±à¯à®±à®²à¯à®•à¯à®•à®¾à®© கற்றலும் சுயகணிப்பீடும்    25
(04)    à®•à®±à¯à®±à®²à¯ˆ வளம்படுத்துதலும் பொதுப்பரீட்சைகளும்    30
(05)    à®µà®¿à®©à¯ˆà®¤à¯à®¤à®¿à®±à®©à¯à®®à®¿à®•à¯à®• கற்றலை உருவாக்குதல்    34
(06)    à®•à®£à®¿à®ªà¯à®ªà¯€à®Ÿà¯à®®à¯ புள்ளி விபரவியலும்    37
(07)    à®ªà®¾à®Ÿà®¤à¯à®¤à®¿à®Ÿà¯à®Ÿà®®à®¿à®Ÿà®²à¯    44
(08)    à®ªà®¾à®Ÿà®¤à¯à®¤à®¿à®Ÿà¯à®Ÿà®®à®¿à®Ÿà®²à®¿à®²à¯ நடைமுறைப் பிரச்சினைகள்    54
(09)    à®µà®•à¯à®ªà¯à®ªà®±à¯ˆ முகாமைத்துவம்    62
(10)    à®•à®£à®¿à®ªà¯à®ªà¯€à®Ÿà¯à®®à¯ தொடர்தொழில் ஆற்றுப்படுத்தலும்    72
(11)    à®•à®£à®¿à®ªà¯à®ªà¯€à®Ÿà¯ தொடர்பான பின்னவீனத்துவ         à®…ணுகுமுறைகள்    77
(12)    à®šà®®à®•à®¾à®²à®•à¯ கணிப்பீட்டியல்    81
(13)    à®•à®£à®¿à®ªà¯à®ªà¯€à®Ÿà¯à®®à¯ - ஊக்கலும் சீர்மியமும்    87
(14)    à®•à®²à¯à®µà®¿à®¯à¯à®®à¯ வேலையும்    94
(13)    à®‰à®šà®¾à®¤à¯à®¤à¯à®£à¯ˆ நூல்கள்    100

Full Description (முழுவிபரம்):

நவீன கல்வி விருத்தியில் கணிப்பீடு ஒரு முதன்மை விடயமாக கருவியாக உருமாற்றம் பெற்று வளர்ந்துள்ளது. அதாவது கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் கணிப்பீட்டியல் ஒரு அறிகை முறைமையாகவும் செயல்வாதமாகவும் பரிமாணம் பெற்றுள்ளது. இதனால் கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் கணிப்பீட்டியல் ஒன்றிணைந்த கூறாக வளச்சிபெறத் தொடங்கியுள்ளது. ஒரு நிலையில் கணிப்பீடுதான் முழுமையான கல்வி அம்சமாகவும் உருமாற்றம் பெற்றுள்ளது. ஆனால் சாதாரண பொதுப்புத்தி மட்டங்களில் மாணவர் மதிப்பீடு என்பது கணித வாய்ப்பாட்டு அளவுக்குள் கணிப்பீடு குறுகி விடுகின்றது. 
இன்று கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் உரிய முறையில் கவனம் செலுத்தாது கணிப்பீட்டில் மட்டுமே அதிகாரம் செலுத்தும் நிலைமை உருவாகிவிட்டது. இதனால் கல்விச் சூழலில் கல்வி அம்சங்களை முழுமையாக அரித்துச் செல்லும் பாசிச ஆதிக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.. இந்தப் பின்புலங்களை நாம் தெளிவாக அறிந்து தெளிந்துகொள்ள வேண்டும். 
பொதுவாக கணிப்பீடு என்பது ஒரு கருவி. இதனை நேர்வழியிலும் பயன்படுத்தலாம், எதிர்நிலையாகவும் பயன்படுத்தலாம். இன்றைய சூழலில் இதனை எதிர்மறையாகப் பயன்படுத்தும் தவறான செயற்பாடுகளை அதிகமாக மேலோங்கி வருகின்றன. குறித்த ஒரு மாணவர் பாட அடைவுக் கணிப்பீட்டில் உயர்ந்த புள்ளிகளையும் வேறொரு மாணவர் குறைந்த புள்ளிகளையும் பெற்றால், குறைந்த புள்ளிகளைப் பெற்ற மாணவரை ஒட்டு மொத்தமாகத் 'தாழ்ந்தவர்' என்று கருதும் மனோபாவம் இடம்பெற்று வருகிறது. இது கணிப்பீட்டின் தவறான வழியில் காட்சி கொள்ளலாகின்றது. இவ்வாறே கருத்தாக்கமும் செய்யப்படுகின்றது. 'மாணவ மாணவ அடைவுகளை ஒப்பிடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்' என்று தேசிய கல்வி நிறுவகத்தின் ஆரம்பக்கல்வி அலகு யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் வெளியிட்ட வழிகாட்டி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளமை நமக்கு (4-2008, பக்: 286) ஓர் எச்சரிக்கையாகின்றது. 
கணிப்பீடு தொடர்பான தெளிவான புலக்காட்சியை ஏற்படுத்தும் வண்ணமும் அதனை அடியொற்றிக் கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டினை சிறப்பாக ஒழுங்கமைக்கும் நோக்குடனும் 'கல்வியியலும் கணிப்பீட்டியலும்' என்னும் இந்நூலினை பேரா சபா.ஜெயராசா ஆக்கித் தந்துள்ளார். 
இந்நூல் ஆசிரியர் மற்றும் கல்வி நிருவாகிகளுக்கு மட்டுமன்றி பெற்றோருக்கும் பெரிதும் பயன்படக்கூடியவாறு அமைந்துள்ளது. இத்துறைசார் எழுத்துகள் எம்மிடையே பூரணமாக இல்லை. இந்தக் குறைபாட்டை இந்நூல் ஓரளவு நிறைவு செய்கிறது. மாற்றுக் கல்விச் செயற்பாடுகளில் அக்கறை கொண்டவர்களுக்கு இந்நூல் புது வெளிச்சம் பாய்ச்சக் கூடியதாகவே இருக்கும்.
தமிழில் சமூகப் பயனுள்ள நூல் வெளியீடுகளை முன்னெடுத்துவரும் சேமமடு பதிப்பகத்தாரது இத்தகு ஆக்கப் பணிகள் பாராட்டுக்குரியவை. தமிழ்ச்சூழலில் இந்த முயற்சிகள் இடை நடுவில் நிற்காது உறுதியாகத் தொடரப்பட வேண்டும். இதற்கு நமது வாசகர்கள் எப்பொழுதும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

தெ.மதுசூதனன்

ஏனைய பதிப்புக்களின் விபரம்
தலைப்பு (Book Name) : கல்வியியலும் கணிப்பீட்டியலும்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2008-08-04-024
CBCN:2008-08-04-24
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2008
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • கணிப்பீட்டியலின் வரலாறு
  • கணிப்பீட்டியல்
  • கற்றலுக்கான கற்றலும் சுயகணிப்பீடும்
  • கற்றலை வளம்படுத்துதலும் பொதுப்பரீட்சைகளும்
  • வினைத்திறன்மிக்க கற்றலை உருவாக்குதல்
  • கணிப்பீடும் புள்ளி விபரவியலும்
  • பாடத்திட்டமிடல்
  • பாடத்திட்டமிடலில் நடைமுறைப் பிரச்சினைகள்
  • வகுப்பறை முகாமைத்துவம்
  • கணிப்பீடும் தொடர்தொழில் ஆற்றுப்படுத்தலும்
  • கணிப்பீடு தொடர்பான பின்னவீனத்துவ அணுகுமுறைகள்
  • சமகாலக் கணிப்பீட்டியல்
  • உசாத்துணை நூல்கள்
Full Description (முழுவிபரம்):

கற்றல் கற்பித்தற் செயற்பாட்டிலே கணிப்பீட்டியல் ஒன்றிணைந்த கூறாக வளர்ச்சி பெறத் தொடங்கியுள்ளது. கணிப்பீடு தொடர்பான தவறான கருத்தாக்கம் (ஆளைஉழnஉநிவழைn) பல்வேறு மட்டங்களிலும் காணப்படுவதால் இத்துறையில் ஒரு நூலாக்கத்தின் தேவையைப் பலரும் வேண்டி நின்றனர். கற்றல் கற்பித்தலிலே உரிய கவனம் செலுத்தப்படாது, கணிப்பீட்டில் மட்டும் ஊன்றிய கவனம் செலுத்தப்படும் நிலையில் இத்துறையிலே தெளிவான காட்சியை ஏற்படுத்த வேண்டிய சமூகத் தேவையும் தோற்றம் பெற்றுள்ளது. 
கணிப்பீடு ஒரு கருவியே அன்றி அது முடிந்த முடிபான கருத்தா அன்று. கணிப்பீடு என்ற கருவியுடன் அரசியல் இணைந்திருத்தலை மார்க்சிய மற்றும் பின்னவீனத்துவ சிந்தனையாளர் தெளிவுபட விளக்கியுள்ளனர். தவறான கணிப்பீட்டு முறைகள் எத்தனையோ மாணவரின் ஆளுமையைச் சிதைத்துமிருக்கின்றன. 
கணிப்பீட்டின் பல்வேறு பரிமாணங்களையும் உள்ளடக்கிய நூலொன்றை எழுதித்தருமாறு தூண்டுதல் வழங்கிய நண்பர் தெ.மதுசூதனன் அவர்கட்கும் திரு.பூ.பத்மசீலன் அவர்களும் மிகுந்த நன்றிக்குரியவர். 
 à®šà®ªà®¾.ஜெயராசா

நவீன கல்வி விருத்தியில் கணிப்பீடு ஒரு முதன்மை விடயமாக கருவியாக உருமாற்றம் பெற்று வளர்ந்துள்ளது. அதாவது கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் கணிப்பீட்டியல் ஒரு அறிகை முறைமையாகவும் செயல்வாதமாகவும் பரிமாணம் பெற்றுள்ளது. இதனால் கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் கணிப்பீட்டியல் ஒன்றிணைந்த கூறாக வளச்சிபெறத் தொடங்கியுள்ளது. ஒரு நிலையில் கணிப்பீடுதான் முழுமையான கல்வி அம்சமாகவும் உருமாற்றம் பெற்றுள்ளது. சாதாரண பொதுப்புத்தி மட்டங்களில் மாணவர் மதிப்பீடு என்பது கணித வாய்ப்பாட்டு அளவுக்குள் கணிப்பீடு குறுகி விடுகிறது. 
கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டில் உரிய முறையில் கவனம் செலுத்தாது கணிப்பீட்டில் மட்டும் அதிகாரம் செலுத்தும் நிலை உருவாகிவிட்டது. இது கல்விச் சூழலில் கல்வி அம்சங்களை முழுமையாக அரித்துச் செல்லும் பாசிச ஆதிக்கத்தை உருவாக்கியுள்ளது. இந்தப் பின்புலங்களை நாம் தெளிவாக அறிந்து தெளிந்துகொள்ள வேண்டும். 
கணிப்பீடு என்பது ஒரு கருவி. அதனை நேர்வழியிலும் பயன்படுத்தலாம். எதிர்நிலையாகவும் பயன்படுத்தலாம். இன்றைய சூழலில் அதனை எதிர்மறையாகப் பயன்படுத்தும் தவறான செயற்பாடுகளே அதிகம் மேலோங்கி வருகின்றன. குறித்த ஒரு மாணவர் பாட அடைவுக் கணிப்பீட்டில் உயர்ந்த புள்ளிகளையும் வேறொரு மாணவர் குறைந்த புள்ளிகளையும் பெற்றால், குறைந்த புள்ளிகளைப் பெற்ற மாணவரை ஒட்டு மொத்தமாகத் 'தாழ்ந்தவர்' என்று கருதும் மனோபாவம் இடம்பெற்று வருகிறது. இது கணிப்பீட்டின் தவறான வழியில் காட்சி கொள்ளலாகின்றது. அவ்வாறே கருத்தாக்கம் செய்யப்படுகின்றது. 'மாணவ மாணவ அடைவுகளை ஒப்பிடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்' என்று தேசிய கல்வி நிறுவகத்தின் ஆரம்பக்கல்வி அலகு யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் வெளியிட்ட வழிகாட்டி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளமை (4-2008, பக்: 286) ஓர் எச்சரிக்கையாகின்றது. 
கணிப்பீடு தொடர்பான தெளிவான புலக்காட்சியை ஏற்படுத்தும் வண்ணமும் அதனை அடியொற்றிக் கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டினை சிறப்பாக ஒழுங்கமைக்கும் நோக்குடனும் 'கல்வியியலும் கணிப்பீட்டியலும்' என்னும் இந்நூலினை முனைவர் சபா.ஜெயராசா ஆக்கித் தந்துள்ளார். 
இந்நூல் ஆசிரியர் மற்றும் கல்வி நிருவாகிகளுக்கு மட்டுமன்றி பெற்றோருக்கும் பெரிதும் பயன்படக்கூடியவாறு அமைந்துள்ளது. இத்துறைசார் எழுத்துகள் எம்மிடையே பூரணமாக இல்லை. இந்தக் குறைபாட்டை இந்நூல் ஓரளவு நிறைவு செய்கிறது. மாற்றுக் கல்விச் செயற்பாடுகளில் அக்கறை கொண்டவர்களுக்கு இந்நூல் புது வெளிச்சம் பாய்ச்சக் கூடியதாகவே இருக்கும்.
தமிழில் சமூகப் பயனுள்ள நூல் வெளியீடுகளை முன்னெடுத்துவரும் சேமமடு பதிப்பகத்தாரது இத்தகு ஆக்கப் பணிகள் பாராட்டுக்குரியவை. தமிழ்ச்சூழலில் இந்த முயற்சிகள் இடை நடுவில் நிற்காது உறுதியாகத் தொடர வேண்டும். இதற்கு எமது வாசகர்கள் எப்பொழுதும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

தெ.மதுசூதனன்