Book Type (புத்தக வகை) : புவியியல்
Title (தலைப்பு) : உயிரினப் புவியியல்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2014-01-01-127
ISBN : 97-895-568-502-60
EPABNo : EPAB/2/19283
Author Name (எழுதியவர் பெயர்) : எஸ்.அன்ரனி நோர்பேட்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2014
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 220
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 660.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

1.    à®‰à®¯à®¿à®°à®¿à®©à®ªà¯ புவியில்: ஓர் அறிமுகம்
2.    à®‰à®¯à®¿à®°à®¿à®©à®™à¯à®•à®³à®¿à®©à¯ தோற்றம்
3.    à®®à®£à¯à®£à®¿à®©à¯ இயல்பும் உருவக்கச் செயன்முறையும் 
4.    à®‰à®²à®•à®¿à®©à¯ பிரதான மண்வகைகளின் பரம்பலும் இயல்புகளும்
5.    à®¨à¯€à®°à¯
6.    à®šà¯‚ழல் தொகுதிகள்
7.    à®‰à®¯à®¿à®°à¯à®ªà¯-புவி இராசயன வட்டங்கள்
8.    à®¤à®¾à®µà®°à®™à¯à®•à®³à®¿à®©à¯ வழிமுறை வளர்ச்சி
9.    à®‰à®¯à®¿à®°à¯à®ªà¯ பல்வகைமை
10.    à®…ருகிவரும் உயிரினப் பல்வகைமை மையங்கள

 

Full Description (முழுவிபரம்):
உயிரினப் புவியியல் என்பது, உலகில் காணப்படும் பல்வேறு இனங்களின் கடந்தகால மற்றும் நிகழ்காலப் பரம்பல் பற்றிய ஆய்வாகவும் புவியியலின் ஒரு கிளையாகவும் விளங்குகின்றது. பௌதிகச் சூழலானது இனங்களையும் அவற்றின் இடஞ்சார்ந்த பரம்பலையும் பாதிப்பதாகக் காணப்படுவதனால் அதனைப் பௌதிகப் புவியியலின் ஒரு பகுதியாகக் கருதுகின்றனர். இதனால் உலகின் உயிரினக் கூட்டம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றின் ஆய்வாகவும் கருதப்படுகின்றது. அத்துடன் உயிரியல், உயிர்ச் சூழல், பரிணாமம் பற்றிய ஆய்வுகளுடன் நெருங்கிய இணைவினையும் கொண்டிருக் கின்றது. இன்று, உயிரினப் புவியியல் வரலாற்று உயிரினப் புவியியல், உயிர்ச் சூழல் உயிரினப் புவியியல் மற்றும் பேணிப் பாதுகாத்தல் உயிரினப் புவியியல் என மூன்று பிரதான பிரிவுகளாகக் கருதப்படு கின்றது. வரலாற்று ரீதியான உயிரினப் புவியியலானது கடந்த கால இனங்களின் பரம்பலில் காலநிலை மாற்றத்தின் செல்வாக்கு மற்றும்  à®•à¯à®±à®¿à®ªà¯à®ªà®¿à®Ÿà¯à®Ÿ சில பகுதிகளில் ஏன் குறிப்பிட்ட சில இனங்கள் விருத்தியுற்றிருக்கின்றன, கண்டத் தகடுகளின் அசைவால் இனங்களின் நகர்வுகள் எவ்வாறு இடம் பெற்றன, அதற்கான சுவட்டுச் சான்றுகள் எவை என்பன பற்றி ஆய்வு செய்கின்றது.
 
''உயிர்ச் சூழல் உயிரினப் புவியியலானது காலநிலை, முதனிலை உற்பத்தி மற்றும் வாழிடங்கள் தொடர்பான விடயங்களை ஆய்வு செய்கின்றது. பேணிப் பாதுகாத்தல் தொடர்பான உயிரினப் புவியியல் இயற்கையினையும் அதன் தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாத்தல் மற்றும் மீள்நிலைக்கு கொண்டு வருதல் தொடர்பாக ஆய்வு செய்கின்றது. 
 
விலங்குகள் மற்றும் தாவரங்களின் வாழிட அமைவிடங்களானது மண் இரசாயனம் அல்லது ஈரப்பதன் மட்டங்கள் அல்லது வெப்பநிலை வீச்சு அல்லது இடம்சார்ந்த அமைப்பு என்பவற்றினால் நிர்ணயிக்கப்படுகின்றன. இதனால் காலநிலை, புவிச்சரிதவியல், மண் விஞ்ஞானம்,  à®‰à®¯à®¿à®°à¯à®šà¯ சூழல், நடத்தை பற்றிய விஞ்ஞானங்கள் என்பன உயிரினப் புவியியலுடன் நெருக்கமான இணைப்பினைக் கொண்டுள்ளன. கடந்த காலத்திலும் இன்றும் பரம்பல் பாங்குகளில் ஏற்பட்ட, ஏற்பட்டு வரும் மாற்றங்கள் பற்றிய பகுப்பாய்வு மற்றும் விளக்கங்களை உயிரினப் புவியியல் முன்வைக்கின்றது.
 
அண்மைக் காலங்களில் சர்வதேச ரீதியாக காலநிலை மாற்றம், உயிரினப் பல்வகைமை தொடர்பான மையக் குவிவு அதிகரித்து வருகின்றது. பல்வேறு நாடுகளிலும் அழிவுக்குட்பட்டு வரும் அருந்தலான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற ஆர்வம் அதிகரித்து வருவதுடன் அவற்றினைப் பேணிப் பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளிலும் சர்வதேச நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. புவியியலின் ஒரு பகுதியாகக் கருதப்படும் உயிரினப் புவியியல் இன்று மாணவர்களின் பாட விதானங்களில் ஒரு முக்கிய கூறாக உள்ளடக்கப்பட்டு வருகின்றது. விஞ்ஞான ரீதியாக விருத்தியடைந்து வரும் புதிய துறைகள் தொடர்பான துணைப்பாட நூல்களின் பற்றாக் குறையானது இன்று உணரப்பட்டு வருகின்றது. இதன் பின்னணியில் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் புவியியல் ரீதியான அறிவினை மேம்படுத்தும் நோக்கில் ‘‘உயிரினப் புவியியல்” எனும் தலைப்பில் ஒரு புதிய நூலை எழுத முற்பட்டோம்.
 
கலைத் துறைப் பாடங்களுள் ஒன்றாக விளங்கும் புவியியலில் விஞ்ஞான ரீதியான அம்சங்கள் அதிகளவில் உள்வாங்கப்பட்டுள்ளன. விஞ்ஞான ரீதியான அடிப்படை அறிவின்றி இப்பாடத்தினைக் கற்றுக்கொள்வது இன்று கடினமாகியுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் சுயமாகக் கற்று விளங்கிக் கொள்வதற்கான எளிய தமிழ் நடையிலான நூல்களின் தேவையை இந்நூல் பெரிதும் நிறைவு செய்யும் எனக் கருதுகின்றோம். இந்நூலில் உயிரினப் புவியியலின் வளர்ச்சி, உயிர்களின் தோற்றம், மண், நீர், சூழல் தொகுதிகள், உயிர்ப்-புவி இரசாயன வட்டங்கள், தாவரங்களின் வழிமுறை வளர்ச்சி, உயிர்ப் பல்வகைமை, மற்றும் அருகிவரும் உயிர்ப் பல்வகைமையைக் கொண்ட மையங்கள் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. புவியியல் மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமன்றி இத்துறையில் ஆர்வமிக்க வாசகர்கள் அனைவரும் தமது ஆதரவை நல்குவார்கள் என்பது எமது நம்பிக்கை.
 
இந்நூலை அழகிய முறையில் அச்சேற்ற உதவிய சேமமடு பதிப்பக உரிமையாளர் சதபூ. பத்மசீலன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
சூசைப்பிள்ளை அன்ரனி நோர்பேட்
தலைவர், புவியியல் துறை
கொழும்புப் பல்கலைக்கழகம்