பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன் STP.Pathmaseelan, 94-11-2321905 , 2331475 , 0777345666 , pathmaseelan@chemamadu.com

 
         
  தமிழுலகில் சேமமடுவை அடையாளம் காட்டும் சதபூ.பத்மசீலன்  
      - தா.அமிர்தலிங்கம்  

பத்மசீலன் அவர்களின் வாழ்க்கைப் பதிவை குறிப்பாக தருவதையிட்டு மிகவும் மகிழ்வடைகின்றேன். பிறந்த அன்று முதல் இன்றுவரை அவரது அசைவுகளும் நட வடிக்கைகளும் எனக்குத் தெரியும் என்ற காரணத்தால் இதனைப்பதிவு செய்ய யான் பொருத்தமானவன் என்றே கருதுகின்றேன். நான் அவரின் உறவினரும் கூட. ஆனால், நாங்கள் நண்பர்களாகவே பழகினோம். அப்படியே இன்றும் தொடர்கின்றது. என்னைவிட வயதில் 3 அகவை குறைந்தவர். வன்னித்தொகுதியில் வவுனியா மாவட்டத்தில் வயலும் வயல்நிலங்கள், அடர்ந்த காடுகளும் குளம், சிறுநதிகள் சூழ்ந்த சேமமடு என்னும் அழகிய கிராமத் தில் 1963ம் ஆண்டு ஆவணிமாதம் 24ம் திகதி இவர் பிறந்தார். தந்தையார் சயம்பு தம்பையா பூலோகசிங்கம் தாயார் தாமோதரம்பிள்ளை வள்ளியம்மை. கூடப் பிறந்தவர்கள் 7 பேர். இருவர் அகால மரணமாகிவிட்டார். 4 பேர் வெளிநாடுகளில் வாழ்கின்றார். கடைக்குட்டித் தம்பி, தாய் தந்தையரும் இவருடனேயே சேர்ந்து வாழ்கின்றனர்.

ஆரம்ப பள்ளிப்படிப்பை (1-5) வ/பன்றிக்கெய்த குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் அப்போது தலைமை ஆசிரியராக இருந்த திரு.செல்லையா உபாத்தியாயர் அவர்களும், ஆசிரியைகளான திருமதி. ராசாத்தி குமாரசாமி திருமதி.சந்திரா கணபதிப்பிள்ளை ஆகியோரிடமும் கல்வி பயின்றார். அதன் பின்னர் 6ம் 7ம் தரங்களை ஓமந்தை மகா வித்தியாலயம் பாடசாலையில் திரு.லோகசிங்கம், திரு.பரமேஸ்வரன் போன்றோரிடம் கல்வி கற்றார். பின்னர் எட்டாம் வகுப்பு தொடக்கம் யா/சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் திருவாளர் பாலச்சந்திரன் அதிபராக இருந்த காலத்தில் திரு.கணேசலிங்கம் திரு.ஜமால்தீன் திரு.நடராசா திருமதி.மகேசன், செல்வி கந்தையா ஆகியோரிடம் கல்வி கற்றார். இக்காலத்தில் ஓய்வுபெற்ற அதிபர் பண்டிதர் செ.சிவலிங்கம் அவர்களிடம் தனியார் வகுப்புகளில் தமிழ்பாடத்தை கற்றுக் கொண்டார்.

இவ்வாறு க.பொ.த சாதாரணதரம் வரை கல்வி கற்றுச் சித்தியடைந்த பின்பு உயர்தர வகுப்புக்களை மீண்டும் ஓமந்தை மகா வித்தியாலயத்தில் லோகசிங்கம் அதிபரின்கீழ் திரு. இலங்கையர் கணேசன், திருமதி. லோகேஸ்வரி, திருமதி. புவனேஸ்வரி, திருமதி.தம்பு, திருமதி.ஜோர்ச் போன்றோரிடமும் கல்வி கற்றார். அதே நேரத்தில் தனியார் கல்வி நிலையங்களில் கலாநிதி.குணராசா, வரதராசா, குமரன், சண் போன்றவர்களிடமும் கற்கும் வாய்ப்பைப் பெற்றார். 1982இல் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் சித்தியடைந்து பல்கலைக் கழக அனுமதிக்கு விண்ணப்பித்து பதில் வருவதற்கு முன்பு நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினார். அத்துடன் அவரது பல்கலைக்கழக படிப்பும் வாழ்வும் இல்லால் போய்விட்டது. இந்தியா சென்று சிறிதுகாலம் வசித்த பின்பு 1987இல் ஏற்பட்ட ஜே.ஆர்.ரஜீவ் சமாதான உடன் படிக்கைக்கு இணங்கி இலங்கை வந்து சாதாரண குடி மகனாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அந்தக் காலப்பகுதியில் எமது வன்னிமக்களின் பெரும் பகுதியினர் வெளிநாடு செல்வதற்கு பல வழிகளில் உதவிகள் ஒத்தாசைகள், ஆலோசனைகள் ஏன் பணம் கூட பெற்றுக்கொண்டு சென்று இன்றுவரை நன்றாகவே வாழ்கின்றனர். அந்தக் காலத்தில் எமது பகுதியில் இருந்து வெளிநாட்டுக்கு சென்றவர்கள் ஒரு சிலரைத்தவிர ஏனைய அனைவரும் இவரின் உதவியினால் சென்றவர்களே என்பது மறைக்க முடியாத உண்மையாகும். இன்று வன்னிமக்கள் முகாம் வாழ்க்கை வாழும்போது ஒரு சிலர் நல்ல நிலையில் வாழ்கின்றார்கள் என்றால் அது இவரின் கருணையால் என்றுதான் சொல்ல வேண்டும். யார் இன்று அந்த நன்றி உணர்வுடன் இருக்கின்றார்களோ தெரியாது. ஆனால், அன்று எம்பகுதி மக்களுக்கு இவர் செய்த பணி இன்றோ அல்லது இனியோ எவராலும் செய்ய முடியாது. அவர் போட்ட பலமான அத்திவாரம் பலரை வெளிநாடு உள்நாடு என பிரித்துக் கூற முடியாத அளவுக்கு வாழ்க்கையை வளம்படுத்தியது. இது மறைக்கவோ அல்லது மறுக்கவோ முடியாத உண்மை. இன்று அதை என் கண் முன்னால் காண முடிகின்றது. நயமாகப் பேசி பணத்தை பெற்றுச் சென்ற பலர் அதனை திருப்பி கொடுக்காமல் இருப்பதையும் நான் அறிவேன். அதற்காக உதவி செய்வதை நிறுத்திக் கொள்ளவில்லை. ஒரு சமயம் வவுனியாவிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்ட போது அவரின் கொழும்பு இல்லத்தில் சுமார் 136 பேர்களுக்கு இடங்கொடுத்து உணவு கொடுத்து பராமரித்தார். இவரிடம் கடன் பெற்று கொடுக்காதவர்கள் பொறுப்பு நின்றவர்களும் அடக்கம் என்பது எனக்குத் தெரியும். எனக்குத் தெரிந்தவரை பணம் வேண்டி அல்லது பணத்தை பொறுப்பு நின்றவர்கள் மேல் கோபப்பட்டதோ மனம் நொந்ததோ இல்லை.

ஆண்டவன் என்னை வாழவைப்பான் என்ற சிந்தனையில் உற்றார் உறவினர் நண்பர்களை வாழவைத்தவர். இன்று எவராவது ஒருவரின் வீட்டில் நல்லது கெட்டது நடக்கும்போது சிலரின் பெயர் உச்சரிக்கப்பட்டுக் கொண்டுதான் உள்ளது. அதில் இவரது பெயரும் ஒன்றாக வேயுள்ளது. அநேகமாக வன்னியில், சேமமடு மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் ஒருவர், இருவரில் இவரும் ஒருவர் என்பதை கூறி பதிவுசெய்ய ஆசைப்படுகின்றேன்.

இப்படியாக பல குடும்பங்களை வாழவைத்த இவர் 06-07-1994 திகதி திருமண வாழ்வில் இணைகின்றார். வாழ்க்கை துணையாக துரையப்பா மகள் ஜெயராணியை கைபிடிக்கிறார். 1996ம் ஆண்டு மூத்த மகள் தர்ஷ்வினி பிறந்தார். 1999இல் மகன் சஞ்சயன், 2001ம் ஆண்டில் 3வது பிள்ளையாக சசிவர்ணனும் கடைக்குட்டியாக 2006ம் ஆண்டில் அபிநந்தாவும் பிறக்கின்றார்கள். இன்று எல்லோரும் கல்வி கற்கிறார்கள். இனிமையான குடும்பத்துடன் வாழ்கின்றார்.

2005ம் ஆண்டு தான் பிறந்த ஊரின் பெயரான சேமமடுவை மறக்காது சேமமடு பொத்தகசாலை என்னும் வியாபார ஸ்தாபனத்தை ஆரம்பித்தார். அது நடைபெறும் காலத்தில் 2007ம் ஆண்டில் இணை நிறுவனமாக சேமமடு பதிப்பகத்தை ஆரம்பித்து 20 மாதங்களில் சுமார் 50 நூல்களை வெளிக்கொணர்ந்துள்ளார். நூல்கள் யாவும் பெரிய கல்வியியலாளர்களால் எழுதப்பட்டுள்ளது. தமிழ்பேசும் நல்லுலகிற்கு 50 நூல்கள் என்பது வரவேற்புக்குரியதும் பாராட்டுக்குரியதுமாகும். சுமார் 50,000 (50x1000) நூல்கள் என்று பார்க்கும்போது வியப்பாக உள்ளது. இதில் யாழ்ப்பாண அகராதி உட்பட சில நூல்கள் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. உண்மையில் சேமமடு என்னும் கிராமத்தில் பெரிய தொழிற்சாலையோ அல்லது நிறுவனமோ கல்விசார் தாபனங்களோ அன்றும் இன்றும் கிடையாது. இவரது தாய்தந்தையர்கள் அதிகம்; படிக்காதவர்கள். ஊரில் உள்ள பெரிய குளமே எல்லோருக்கும் வாழ்வாதாரம். அதற்குள் பல ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. அங்கே படித்து பல்கலைக் கழகம் சென்றவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் உயர்தொழில் என்று எண்ணும்போது தம்பையா மார்க்கண்டு (முன்னாள் வவுனியா அரசஅதிபர்) காசிப்பிள்ளை கந்தையா (பல்கலைக்கழக விரிவுரையாளர்) ஆகியோர் ஞாபகம் வருகின்றது. இப்படியாக கல்வி பின்புலங்கள் அறியப்படாத ஊரில் பிறந்து படித்து இவ்வளவு தொகை நூல்களை வெளிக்கொணர்ந்து பெரும் கல்வியாளர்களுடன் ஊடாடுபவராக தனது வாழ்க் கையை நடாத்திக் கொண்டு இருக்கும் நபராக பத்மசீலன் மட்டும்தான் இருப்பாரென நான் கருதுகின்றேன். எனது அறிவுக்கு எட்டியவரை கல்விப் புலத்தில் அதிபராக கடமையாற்றுகின்றேன் இவ்வளவு நூல்களை யாரும் எமது ஊரிலோ அல்லது எமது வன்னிப் பிரதேசத்திலோ மிகக் குறுகிய காலத்தில் பதிப்பித்து தமிழ்ப்பேசும் நல்லுலகிற்கு வழங்கவில்லை என்பது எனது பணிவான கருத்து.

இவ்வெல்லாப் பணிக்கும் கூடவே தாய்தந்தை யரும் மனைவியும் பக்க பலமாகவே இருக்கின்றார்கள். பிள்ளைகளும் அப்படியே. இவர் தொடர்ந்து இப்பணியை மேலும் சிறப்பாகச் செய்து இன்றும் ஆயிரமாயிரம் நூல்களை தமிழ்கூறும் உலகுக்கு வழங்க வேண்டும் என அவர் வணங்கும் வைரவக் கடவுள் துணை நிற்க வேண்டுமென வணங்கி வாழ்த்தி விடைபெறுகின்றேன்.


இலங்கையில் தமிழ் நூல் பதிப்பு முயற்சியில் சேமமடு பதிப்பகம் காத்திரமாக இயங்கி வருகிறது. கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து சேமமடு பதிப்பகம் கல்விசார் நூல்களை வெளியிடுவதில் பெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது. இதுவரை 150 க்கும் மேற்பட்ட சமூக அறிவியல் பல்துறைசார் நூல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக கல்வியியல் நூல்களுக்கு சேமமடு பதிப்பகம் தனித்துவமான முத்திரையுடன் திகழ்ந்தது.

பேரா.சபா. அவர்களின் ஓய்வு நிலைக்கு பின்னர் 45 மாதத்தில் தொடர்ந்து எழுதிய 25 நூல்களை ஒருசேர வெளியிட்டு தமிழர்க்கும் பேராசிரியருக்கும் பெருமை சேர்த்தவர். தொடர்ந்து தமிழ் புத்தக வெளியீட்டில் குறுகிய காலத்தில் இவ்வளவு நூல்களை யாரும் வெளியிடவில்லை. இந்த பெருமை சேமமடு பதிப்பக உரிமையாளர் சதபூ.பத்மசீலனையே சாரும். இந்த வெளியீட்டு துறையில் பெரும் இலாபம் எதையும் சம்பாதிக்க முடியாது என தெரிந்தும் இந்த நாட்டிலிருந்து தொடர்ச்சியாக நூல்களை வெளியிட்டு வருகிறார். கல்வி சமூகத்தில் ஊடாடிவருகிறார் என்பது பெரும் வியப்பைத் தருகிறது. உண்மையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய ஆறு நூல்கள் இதே சேமமடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நானும் பேராசிரியர் சபா அவர்களும் ஒரே நேரத்தில் பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்து ஒரே அறையில் இருந்தோம். நாம் இருவரும் சமகாலத்தில் பல்வேறு பல்கலைக்கழக ஆய்வுகளில் விரிவுரையாற்றினோம். நான் ஓய்வு பெற முன்னர் அவர் ஓய்வு பெற்றுவிட்டார். ஒய்வு நிலையில் இருந்து கொண்டு இவ்வகையான நூல்களை எழுதி சேமமடு பதிப்பகத்தினூடாக வெளியிட்டது என்பது ஒரு மாபெரும் சாதனை. நாம் இருவரும் ஒன்றாக இருந்தோம் என்பதையும் சேமமடு பத்மசீலன் அவர்கள் இவ்வளவு நூல்களையும் வெளியிட்டுள்ளார் என்பதும் இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டியதாகும்.

பேரா. சபா. ஜெயராசாவின் 40க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்ட பெருமை சேமமடு பதிப்பகத்திற்கே உரித்தாகிறது. அத்துடன் சிறுவர் இலக்கியத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் 50க்கும் மேற்பட்ட சிறுவர் நூல்களையும் வெளியிட்டுள்ளது. மிக குறுகிய காலத்தில் அறிவுதுறைசார் நூல்கள், உளவியல் நூல்கள், சிறார் இலக்கிய நூல்கள் என வெளியிட்டு குறுகிய காலத்தில் தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளது. இந்நூல்களை வெளியிடுவதற்கு சேமமடு பதிப்பக உரிமையாளர் சதபூ.பத்மசீலன் பல்வேறு நெருக்கடிகளையும் சிக்கல்களையும் எதிர்நோக்கினார். ஆனாலும் எந்த சந்தர்ப்பத்திலும் சலிக்காது தமிழ் பதிப்பு முயற்சியை கைவிடாது தமிழ் பணி செய்து கிடப்பதையே தனது பெரும் பணியாக கருதி இயக்கி வருகின்றார். அதனால்தான் இவ்வளவு பெருந்தொகையான நூல்களை அவரால் வெளியிட முடிந்துள்ளது.

தமிழில் மறந்துபோன அரிதான தொன்மைசார் நூல்களை வெளிக்கொண்டு வருவதிலும் சேமமடு பதிப்பக உரிமையாளர் சதபூ.பத்மசீலன் மிகுந்த அக்கறையுடன் இயங்குகிறார். அந்த வகையில் யாழ்ப்பாண அகராதி (1842), மீண்டும் தமிழில் சேமமடு பதிப்பத்தினர் வெளியிட்டுள்ளனர். North Muthal Kopallava varai என்ற நூல் பெரிய பிரித்தானியாவைச்U.K சேர்ந்த இலங்கையின் முதலாவது ஜனாதிபதியான திருவாளர் பிடரிக் நோர்த்தும் இறுதி ஜனாதிபதியான வில்லியம் கோபல்லாவ பற்றிய ஒரு அரசியல் நூலும் மீள்பதிப்பு கண்டுள்ளது. Manual of The Vanni Districts ( Vavuniya and Mullaittivu ) என்ற தலைப்பில் 1895 இல் பெரிய பிரித்தானியாவைச் சேர்ந்த லூயிஸ் அவர்களின் 1895 இலங்கையில் வன்னி மாவட்டத்தில் ஆளுனராக இருந்த போது J. P. Lewis அவர்களால் எழுதப்பட்ட ஆங்கிலப் புத்தகத்தினை வன்னி தமிழாக்க குழுவினரால் அழகாக மொழிபெயர்க்கப்பட்டு சேமமடு பதிப்பகௌரிமையாளர் பத்மசீலன் அவர்களினால் ஒரே வருடத்தில் இரு பதிப்பு கண்டுள்ளது. அத்துடன் இன்னூல் Canada, France, Norway, Germany, Suwisland, India, Malaysia, U.K(இரு தடவைகள்) ஆகிய நாடுகளில் அறிமுக வெளியீடு செய்யப்பட்டுள்ளது. எனது குருவும் மகஜனாவின் ஒய்வு நிலை அதிபருமான கனகசபாபதி அவர்களின் எம்மை வாழ வைத்தவர்கள் என்ற நூலுக்கு பின்னர் அதிக இடத்தில் வெளியிடப்பட்ட நூல் வன்னி மாவட்டம்: ஒரு கையேடு இந்நூலேயாகும்.

முன்னைநாள் யாழ்.பல்கலைகழக மாணவர் சிவபாலன் அவர்களினால் எழுதப்பட்டு சேமமடு பதிப்பக உரிமையாளர் பத்மசீலனால்வெளியிடப்பட்ட அ, ஆ, இ... உயிர்மொழி எனும் நூல் இந்த வருடம் (2013) லண்டன் மாநகரில் பெரும் திரளான மக்கள் அறிஞர்கள் முன்னிலையில் வெளியிட்டு வைக்கப்பட்டார். அந்த வெளியீட்டுக்கு சேமமடு பதிப்பக உரிமையாளர் பத்மசீலன் அவர்கள் விசேட விருந்தினராக அழைக்கப்பட்டு ''பிழையறு பிரசுரன் '' என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

யுத்த நிறைவுக்குப் பின்னரும் நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் வன்முறைகளுக்கும் முகங்கொடுத்து உயிராபத்தினையும் எதிர்நோக்கியிருந்தார். ஆனாலும் தமிழ்மொழி மீதும் தமிழர் மீது கொண்ட பற்று காரணமாகவும் ஒரு பேனைமுனைப் போராளியாக பத்மசீலன் இருந்து வருகிறார். அவர் இந்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் புத்தக புத்தாக்க வளர்ச்சிக்கும் தொடர்ந்து பாடுபட வேண்டுமென இதற்கு கல்வி சமூகம் உறுதுணையாக இருக்க வேண்டுமெனவும் இறைவனை வேண்டுகிறேன்.

நன்றி

வணக்கம்

பேரா.சோ.சந்திரசேகரம்

30.04.2013 - கொழும்பு.


The location, objectives and the history of Chemamadu Book Depot

 Sathapoo. Pathmaseelan who gives identity to the Chemamadu Book Depot in Tamil World.

I am very much glad to give the life’s record of Pathmaseelan. I am the very suitable person to give his history as I have known him from his birth. Not only that but I am one of his close relatives. Though he is three years younger than me, we maintain our relationship as friends.

He is the son of Sayampu Thambaiah Poologasingham and Thamotharampillai Valliyammai. He was born on 24th of August 1963 at Chemamadu which is a very beautiful village in Vavuniya District with acres of paddy fields, thickets, streams and ponds. He has seven siblings. Two siblings died and four are living in foreign countries. His youngest brother and parents are living with his family.

He studied his primary education ( Grade 1 – 5 ) at V/Pantrikkeithakulam G.T.M.S during the period of the principal Mr. Chellaiah and the teachers Mrs. Rasaththy Kumarasamy and Mrs. Chandra Kanapathippillai. Then he continued his grade 6 and 7 at V/Omanthai Maha Vidyalayam during the period of the principals Mr. Logasingham and Mr. Parameswaran. He followed his grade 8 at J/Chawakachcheri Direberg College during the period of the principal Mr. Balachandran. There , he was taught by Mr.Ganeshalingham, Mr.Jemaldeen, Mr.Nadarasa, Mrs.Magesan and Miss. Kandaiah. During this period, he personally from the retired principal Pandit.S.Sivalingham.

For following the G.C.E (A/L), he again joined at V/Omanthai Maha Vidyalayam during that period, Mr.Logasingham was the principal of that school. Mr.Elankaiyar Ganesan, Mrs.Logeswary, Mrs.Puvaneswary, Mrs.Thampu, Mrs.George were the teachers for the A/L classess. In adition to this, he got private classess from Mr.Gunarasa, Varatharasa, Kumaran and Shan. In 1982, though he got the university entrance in Art stream, he left out from the country due to the situation of the country. After the agreement of J.R.Rajeev in 1987, he returned from Srilanka and identified himself as a civilian. At that time, it was a true that he was the person who helped a lot to his relatives, friends and neighbours in many ways and gave advices and guidances to go to abroad. Though a lot of people benefited from him, they didn’t give any gratitude to him and they cheated him in many ways without paying back the money or property got from him. In this way he has been suffering a lot. But he countinuously do his help and hospitality. Once people were chased from Vavuniya, he happily welcomed them and gave security and accomadation about 138 members at his resident in Colombo without any hesitation.

He is very pious and very deep faith in God. Due to that , he raises his helping hand to relatives, friends and neighbours. He is the one who is in every ones’ heart of Chemamadu village due to his great service.

He started his marriage life with Thuraiyappa Jeyarani on 6th of July 1994 and got children, Tharshvini, Sansayan, Sashivarnan and Abinantha respectively in 1996, 1999, 2001 and 2006.The children are studying and they live happily with their family.

In 2005, he established the Book Depot as “Chemamadu Book Depot” for indicating the name of his native village Chemamadu. In 2007, Chemamadu Press was established and within 20 months there were 50 books published. The books were written by educationists and the book “Thamil Pesum Nallulakittu 50 Noolkal” was honoured and praised. Publishing 50 000 (50x1000) books is not a simple task . It is a marvelous work. The dictionary of Jaffna was reprinted and it was a great work of the press.

Chemamadu is a very small village with natural surrounding without any facilities except paddy fields. Most of the villagers are farmers except one or two government servants. Thampu Markandu ( Former Government Agent – Vavuniya), Kasippillai Kandaiah ( Lecturer- University) are some of them.

As I am serving as a principal of a school, I know that Pathmaseelan is the only person who publishes a lot of books to the Tamil world and future generation. In fact, it is true, his parents and wife are the supportive pillars to him to do this great effort to the society.

I wish him all the success to his untiring effort and God Vairavar will help him a lot in future. Thanking You.

Mr.T.Amirthalingham, BA , Dip. In . Edu ,

MEd Principal (SLPS 2-I),

V/Puthukkulam Maha Vidyalayam


I frankly say that the Chemamadu Press is the most relevant institute to publishing a wide variety of publications. More than 150 books including multi level books have been published by the press from 2005.

Before the retirement of Prof. Saba Jeyarasa, it published 25 books within 45 months and it gave great honour to professor and Tamils. Though Sathapoo. Pathmaseelan didn’t gain enough profit from the publication, he continuously does his great service to the mankind. My 4th and 5th books were also published by this press. Prof. Saba Jeyarasa and I followed our university education at the same period and we were roommates. During that period , this press helps hand in hand to us to publish books.

This press published more than 40 books of Prof. Saba and more than 50 books of children’s literature. By publishing a lot of books Sathapoo. Pathmaseelan faced a lot of difficulties, hardships to continue his service. The ancient by Chemamadu books were published by this press with the help of untiring effort of Pathmaseelan. Dictionary of Jaffna (1842) was published in Tamil by Chemamadu Press. The book “From Governor of Srilanka of Great Britin Fredrick North to William Goballawa” also was reprinted here. The topic of “ Manual of the Vanni District ( Vavuniya and Mullaitivu) which was translated by the Government Agebt of Great Britin J.P.Lewis who was the civil service officer of Mullaitivu- Vavuniya- Mannar Also published by Pathmaseelan within one year. And also this book was introduced in Canada, France, Norway, Germany, India, Malaysia and Great Britin (two times).

Mr.Thurai Sivabalan , former student of University of Jaffna wrote a book on Tamil vowels(ana aana ena uagir mozhe) has been published in 2013 n London and Pathmaseelan has been invited and honoured as “Pilaiyaru Pitasutan”.

Due to the situation of the country, , Pathmaseelan has been suffering a lot. However, he continues his work due to the love and deep attachment of Tamils and Tamil Language. I pray the god for his fruitful service.

Thanking You.

From : Prof. S. Chandrasegaram,

30.04.2013, Colombo.6