Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : கல்வியில் புதிய தடங்கள்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2011-03-02-091
ISBN : 978-955-1857-90-5
EPABNo : EPAB/02/18575
Author Name (எழுதியவர் பெயர்) : சோ.சந்திரசேகரன்
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2011
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 128
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 300.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • கலாநிதி பந்துல குணவர்த்தனாவின் கல்வி அறிக்கை (2009)
  • இலங்கையின் கல்விமுறை  à®Žà®¤à®¿à®°à¯à®¨à¯‹à®•à¯à®•à¯à®®à¯ பிரச்சினைகள்
  • பாடசாலை மேம்பாட்டுத் திட்டம்
  • இலங்கையில் சர்வதேசப் பாடசாலைகள்
  • கைத்தொழில் சமூகமும் அறிவுசார் சமூகமும்
  • அறிவுச் சமூகத்துக்கான எழுத்தறிவுத் திறன்கள்
  • அறிவுப் பொருளாதாரத்தின்  à®…றிவு ஊழியர்கள்
  • அறிவு மைய சமூகத்தில் அறிவின் பண்புகள்
  • அறிவுப் பொருளாதாரம்:  à®šà®¿à®™à¯à®•à®ªà¯à®ªà¯‚ரின் முன்மாதிரி
  • சிங்கப்பூரின்  à®‡à®°à¯à®®à¯Šà®´à®¿à®•à¯ கொள்கை
  • உலகிற் சிறந்த பல்கலைக்கழகங்கள்
  • காலாவதியாகும் பல்கலைக்கழகப் பட்டங்கள்
  • பல்கலைக்கழகங்களில் வன்செயலும் ‘பகிடிவதையும்” 
  • மலேசியத் தமிழர்களின்  à®•à®²à¯à®µà®¿à®ªà¯ பிரச்சினைகள்
  • கண்டனத்துக்குள்ளாகியுள்ள  à®‡à®¨à¯à®¤à®¿à®¯ உயர்கல்வி
  • இந்தியாவின்  à®’துக்கீட்டுக்கொள்கை
Full Description (முழுவிபரம்):

இன்று கல்வியியல் துறையில் பல்வேறு புதிய புதிய நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏனைய அறிவுத் தொகுதிகளுடன் ஒப்பிடும்பொழுது கல்வியியல் எழுத்துக்கள் அதிகம். இதற்குக் காரணமானவர்களாக இருப்போரில் பேராசிரியர் சோ.சந்திரசேகர னும் குறிப்பிடத்தக்கவர்.
உலகளாவிய ரீதியில் கல்வித் துறையில் இன்று பல்வேறு புதிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த மாற்றங்களை தமிழ் வாச கர்கள் உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகையில் ஆக்கங்களாக வெளிவருகின்றன. இவ்வாறு ஆக்கம்பெற்ற பதினாறு கட்டுரைக ளைத் தொகுத்து 'கல்வியில் புதிய தடங்கள்' எனும் தலைப்பில் பேராசிரியர் சந்திசேகரன் நூலாகத் தருகின்றார். 
கல்வியியலில் ஏற்பட்டுவரும் புதிய சிந்தனைகள் செல்நெறிகள் முதலானவற்றை இந்நூலில் இனங்காணலாம். குறிப்பாக அறிவுப் பொருளாதாரம், அறிவுச்சமூகம் முதலான எண்ணக்கருக்களின் அறிமுகம், இவை கல்விசார் நடைமுறைகளில் எத்தகைய விளைவு களை ஏற்படுத்துகின்றன என்பதையெல்லாம் தெளிவுபடுத்தப்படு கின்றது. 
மேலும் கலாநிதி பந்துல குணவர்த்தனாவின் கல்வி அறிக்கை, இலங்கை கல்வி முறை எதிர்நோக்கும் பிரச்சினைகள், இலங்கையில் சர்வதேசப் பாடசாலைகள், பாடசாலை மேம்பாட்டுத் திட்டம் முத லான கட்டுரைகள் இலங்கைச் சூழலில் கல்வி முறைமையின் இயக் கம் எவ்வாறு உள்ளது என்பது பற்றிய விமரிசனக் குறிப்புக்களையும் தருகின்றது. இதைவிட உலகில் சிறந்த பல்கலைக்கழகங்கள், காலாவதியாகும் பல்கலைக்கழகப் பட்டங்கள், பல்கலைக்கழகங் களில் வன்செயலும் பகிடிவதையும் முதலான உயர்கல்வி தொடர் பிலான சிந்தனைகளையும் பிரச்சினைகளையும் முன்வைக்கின்றது. மலேசிய, இந்திய, சிங்கப்பூர் முதலான நாடுகளில் கல்விக்கொள்கை, மொழிக்கொள்கை முதலான விடயங்களும் அலசப்படுகின்றது. 
'கல்வியில் புதிய தடங்கள்' எவ்வாறு? எப்படி? மையங் கொள்கின்றது என்பது பற்றிய சில அடிப்படைப் புரிதல்களை மற் றும் சில கேள்விகளை மாற்று அணுகுமுறைகளை முன்வைக்கின் றது. இவை மூலம் எமது கல்விக்கொள்கைகள் பற்றிய விளக்கங்க ளையும் விசாரணைகளையும் பலநிலைகளிலிருந்து மேற்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றது. 
தற்போது பேராசிரியர் சந்திரசேகரன் ஓய்வுபெற்றலும் தொடர்ந்து கல்வியியல் ஆக்கங்களை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டு உழைத்து வருகின்றார். அவரது பணிகள் இன்னும் மென்மேலும் தொடர வேண்டும். 

தெ.மதுசூதனன்