Book Type (புத்தக வகை) : கல்வியியல்
Title (தலைப்பு) : ஆசிரியர் வாண்மையியல்
Chemamadu Number (சேமமடு இலக்கம்) : CBCN:2011-07-01-096
ISBN : 978-955-1857-95-0
EPABNo : EPAB/02/18815
Author Name (எழுதியவர் பெயர்) : சபா.ஜெயராசா
Publication (பதிப்பகம்): சேமமடு பதிப்பகம்
Publisher (பதிப்பாளர்): சதபூ.பத்மசீலன்
Release Date (பதிப்பிக்கப்பட்ட ஆண்டு): 2011
Dimension (நூலின் உயரம், அகலம், எடை) : 21 cm 14 cm
No. of Pages (பக்கங்களின் எண்ணிக்கை): 120
Price (LKR) (விலை (இலங்கை ரூபாய்)): 480.00
Edition (பதிப்பு): முதற் பதிப்பு
Binding (கட்டு): சாதாரணம்
Language (மொழி): தமிழ்
Translation (மொழிபெயர்ப்பு): இல்லை, இது ஒரு நேரடி நூல்
Sales Details (விற்பனை விபரம்): விற்பனையில் உள்ளது
Content (உள்ளடக்கம்):

பொருளடக்கம்

  • ஆசிரியத்துவத்தின் வரலாறு
  • ஆசிரியத்துவமும் சமூக மெய்யியல் அணுகுமுறைகளும்
  • ஆசிரியரும் வாண்மைத் தேர்ச்சிகளும்
  • ஆளுமை அணுகுமுறைகள்
  • ஆசிரியரும் தலைமைத்துவமும்
  • ஆசிரியரும் நெருக்கீடும்
  • ஆசிரியரும் அறவியலும் ஒழுக்கங்களும்
  • நேர முகாமைத்துவம்
  • மாணவர் வகைப்பாடுகளும் ஆசிரியரின் அணுகுமுறைகளும்
  • மாணவர் தரவு திரட்டலும் வழிகாட்டலும்
  • தொடர் தொழில் வழிகாட்டல்
  • பாடசாலை மட்டச் சீர்மியம்
  • அறிவுக் கம்பனிகளின் வளர்ச்சியும் ஆசிரியரும் 
  • ஆசிரியரும் தன்னிலைக் கணிப்பீடும்
  • அறிவின் சமூகவியல்
  • ஆசிரியருக்கான செவ்வழிப்பட்டியல்
Full Description (முழுவிபரம்):

ஆசிரியர் வாண்மையியல் பற்றிய விரிவான நூல் ஒன்றின் தேவையை தொழிற்சங்கக் கருத்தரங்குகளிலே அவ்வப்போது தெரி வித்து வந்துள்ளனர். நாட்டின் கல்வி வளம் ஆசிரிய வாண்மை வளத்திலே தங்கியுள்ளது. ஆசிரிய வாண்மையின் நலிவு கல்வியின் நலிவாகவும் நாட்டின் ஒட்டு மொத்தமான மேம்பாட்டின் நலிவாக வும் மாற்றமுறும் இயல்பைக் கொண்டது. 
ஆசிரியர் மீதான அக்கறையை வளர்க்கும் அறிகைக் காட்சியை உருவாக்குதலே இந்நூலாக்கத்தின் சிறப்பார்ந்த இலக்காக அமைந் துள்ளது. மூன்றாம் உலக நாடுகளில் மிகுந்த நெருக்கடிகளின் மத்தியிலேதான் ஆசிரியர் தமது பணிகளை முன்னெடுக்கின்றனர். எதிர்மறையான அரசியல் தலையீடுகளுக்கும் உள்ளாக்கப்படு கின்றனர். 
அறிவின் பிரவாகத்தை உருவாக்குபவர்களும் அவற்றின் அறைகூவல்களை எதிர்கொள்பவர்களும் ஆசிரியர்களாக இருத்த லினால் அறிவுப் பொருளாதாரத்திலும் அறிவார்ந்த சமூகத்திலும் அவர்களின் வகிபாகம் மேலும் முக்கியத்துவம் பெறத் தொடங்கி யுள்ளது. 
மேற்கூறியவற்றின் எழுபுலத்தில் இந்நூல் ஆசிரியருக்கு முன்னீடாகத் தரப்படுகின்றது. இந்நூலாக்கத்துக்குத் துணை நின்ற நண்பர்களும் வெளியீட்டாளரும் நன்றிக்குரியவர்கள். 

சபா.ஜெயராசா