![]() அரசியல் விஞ்ஞானம் : அரசியல் செயற்பாடு |
அரசியல் நடவடிக்கை பரந்த சமூக முறையின் பிரிக்க முடியாத பகுதியாகும். இதனால் அரசியல் விஞ்ஞானம் உறுதியாக சமூக விசாரணை என்ற பரந்த பரப்பில் நிலைகொண்டிருக்கின்றது என லாம். சமூக விஞ்ஞானங்கள் சமூகக் குழுக்களின் மனித நடத்தை தொடர்பான விடயங்கள் பற்றிய கற்கையினை ஏதோவொரு வகை யில் கவனத்தில் கொள்கின்றன. சமூகவியலாளர்கள் ஒரே விதமான தகவல்களைச் சேகரித்து ஒரேவிதமான கருதுகோள்கள், கோட்பாடு களின் அடிப்படையில் ஒரேவிதமான கண்டுபிடிப்புகள் அல்லது முடிவுகளுக்கு வருகின்றனர். விஞ்ஞான ரீதியான விசாரணையின் நோக்கம் மனப்பதிவுக்கு அறிவைப் பதிலிடுதலாகும். விஞ்ஞானம் நம்பிக்கையான அறிவைத் தேடுகிறது என்ற அடிப்படையில் என்ன நடந்தது? என்ன நடக்கிறது? என்பவைகளை எதிர்வு கூறவும் முடியும். |
















